கந்தன் காத்த அருணகிரிநாதர்
முனைவர் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள், மடாதிபதி, சிரவணபுரம், கெளமார மடாலயம், கோவை.
ஆதவன், சிவன், அம்பிகை, முரக்கறி, ஆகு
மீத மர்ந்தவன் குகன் எனும் அறுவரை விழைவாம்
கோத கன்றதென் அருணையின் கோபுரத்துய்ந்த
போத கன்தீருச் சரிதமய்ப் பொருள்தரும் பொருட்டே.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருணகிரிநாதர், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதீப் புகழ் பபற்ற அருளாளர். இவர் தீருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் எமாழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடியவர் சிரவையாதீனம் ஆதிகுரு முதல்வர் இராமானந்த சுவாமிகளின் ஞான குருவாக விளங்கிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆவார்கள்.
அருணகிரிநாதரின் பாக்கள் யாவும் கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நீறைந்தது. இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1௦88க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று அறிய முடிகிறது.
இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்தீர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் தோத்தீர நூலாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்ககது. அருணகிரிநாதரின் செய்யுட்களை எளியோரும் அறியும் வண்ணம் உரையுடன் கெளமார மடாலயம் சார்பாக வவளியிடப்பட்டூ வருகிறது.
அருணகிரிநாதர் இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் தீருமணமும் நடந்தேறியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனால் நோயும் வந்து சேர்ந்தது. இவர் வீட்டை விட்டே எவளியேறிக் கால் போன போக்கில் சென்றார். திருவண்ணாமலைக் கோபுரவாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அக்கரங்கள் குன்றுதோறாடூம் குமரனுடையதே ஆகும்.
வடிவேலவன் தன் தீருக்கோலத்தைக் காட்டி அருளினான். "அருணகிரிநாதரே!" என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே :"சரவணபவ'' என்னும் ஆறைழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நீலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.
முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுக்க "முத்தைத் தரு பத்தித் திருநகை" எனும் வண்ணத் திருப்புகழை அருணகிரிநாதர் பாடினார்.அதைத் தொடர்ந்து கந்தர் அநுபூதி, கோழிக்கொடியன் மீது வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், கந்தர் அந்தாதீ என எண்ணற்றப் பாக்களை இயற்றினார்கள்.
இவரை வழி ஒற்றி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும், தவத்திரு கந்தசாமி சுவாமிகளும் முருகப்பெருமான் மீது பல திருப்புகழைப் பாடியுள்ளனர்.
மேலும் முருகக்கடவுள் மீது இனிய வண்ணப்பாக்கள் பாடிய அருளாளர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், அருணகீரிநாதருடைய வரலாற்றைச் செய்யுள் நடைப் புராணமாக இயற்றியுள்ளார்.
அருணகிரிநாதர் வரலாற்றைத் தாமாகப் பாடவில்லை என்றும் ஆறுமுகக் கடவுள் உள்நீன்று உணர்த்த அவனருளாலே பாடியதாகவும் குறிப்பிடுகின்றார். இந்நூலில் பூருவ புண்ணியச் சருக்கம், தீரு அவதாரச்சருக்கம், மாயை விளையாட்டூச் சருக்கம்,அருட்பேற்றுச் சருக்கம், வில்லிபுத்தூராழ்வார் கலகச் சருக்கம், சம்பந்தாண்டான் பகைமைச் சருக்கம், பாரிசாதச் சருக்கம், கீளி வாழ்க்கைச் சருக்கம், கோபுரத்துச் சருக்கம் என ஒன்பது சருக்கங்களாக மிக அழகாகப் பாடியுள்ளார்.
இதில் அருணகிரிநாதரைப் பற்றி தாம் பாடிய புராணத்தை முருகப்பெருமானே ஏற்றுக் கொண்டதாக மகான் தண்டபாணி சுவாமிகள் இந்நூலில் குறிப்பிடுகின்றார்.
பத்தியினால் இப்படிநான் பாடூமிந்தக் காவியத்தைச்
சத்தியமாய்ச் செவ்வேள்சரி வயன்றான் - புத்தியுள்ளீர்
ஐயமுற வேண்டா மருணகிரி நாதன்பால்
மமய்யடிமை யாகிமகிழ் வீர்
அருணகிரிநாதர் தமது வாழ்க்கை நீலையினையும், அனுபவத்தையும் தன் தீருப்புகழ் வாயிலாகவே பகீர்ந்துள்ளார்கள்.
மனையவள் நகைக்க தாதை தமரோடூம் மனமது சலிப்ப
நாயன் உளமது சலிப்ப" (பாடல் 392)
என்ற தீருப்புகழ் அடியே சான்றாகும்.
திருப்புகழ் சிறந்த சைவசித்தாந்த நூல் என்று சுவாமி விபுலானந்தர் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
அருணகிரிநாதர் திருவள்ளுவரிடத்தும் திருக்குறள் மீதும் மதிப்பும் மரியாதையும் உடையவர் என்பதை அவருடைய திருப்புகழில் வரும் வரிகளே சான்றாகும்.
அறம்பாரு ளின்பம் அடைய ஓதி (கமலமாதுடன்)
இடரற முப்பால் செப்பிய கவிதை
அருணகிரிநாதர் பல வரலாற்றுச் செய்திகளைத் தன் திருப்புகழில் பாதிந்து வைத்துள்ளார்.
உதாரணமாக 'ஆழியிற் mule என்னும் திருப்புகழில் அருணகிரிநாதர் உத்திரமேரூரில் திருமாலும், பிரம்மனும், சிவனாரும், கணபதியும்,ஞானிகளும் ஆயிரத்து இருநூறு மறையோர்கள் வாழ்கின்றனர். அத்தகைய தலத்தில் முருகன் எழுந்தருளியிருக்கின்றான் என்று பாடியுள்ளார்.
கூடல் என்று அழைக்கப்படும் மதுரையில் முத்தமிழ் வல்ல புலவர்கள் கூடித் தமிழ் வளர்த்தனர் என்பதை அருணகிரியார்
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய
சில அற்புதமான ஆகிய கூட ஏற பணி
எனப் பாடியுள்ளார்.
தமிழ்மாழியின் மீது இவர் கொண்ட தீராக் காதலும் முருகன் மீது கொண்ட அளவிலா பக்தி ஏநறியுமே இவருக்குப் பேராற்றலைத் தந்தது.
முத்தமிழ் வித்தகன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள தீருச்செந்தூரினைப் பாடும் போது
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி செந்திற்பதி
என்று பாடியுள்ளார்.
ஒவ்வொரு தலத்தின் சிறப்பைப் பாடும் போது அங்கு குடி கொண்ட இறைவனின் பெருமையை மட்டூமன்றி அத்தலத்தின் வரலாறுகளையும் தன் திருப்புகழில் புனைந்துள்ளார். காஞ்சிப்பதி பற்றி பாடும்போது கல்வியில் சிறந்தது காஞ்சி மாநகரம் என்பதை தன் வாய்மொழியில்
காந்தக் கலனும் ஊசியு GLO weer
ஆய்ந்து தமிழ் ஓதிய சீர்பறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய பெருமாளே' (வாய்ந்தப் பிடை)
எனப் பாடி இருப்பது சிறப்பு.
முருகனது பெருமை மட்டூமின்றி சிவபெருமானின் திருவிளையாடலின் செய்திகளையும் தமது பாடல் வாயிலாக அருணகிரியார் பாடியுள்ளார் மாணிக்கவாசகர் பற்றி
வாதவூரனை மதித்தொருகு ருக்ககளன
ஞானபாதம் வளி யிட்டூநரி யிற்குழுவை
வாசி யாமென நடத்துவகை யுற்றரச னன்புகான்.
எனப்பாடியுள்ளார். ஞானமே வடிவானவன் கந்தப் பெருமான் என்பதை அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தீலும் (21) கந்தர் அனுடூதியிலும் (28) முருகனை '*ஞானாகரன் ": என்றே பாடியுள்ளார்.
தமிழ்க்கடவுளான கந்தப்பெருமான் தன் தந்தைக்குப் பிரணவ உபதேசம் தமிழில் கூறியதாக மொழியின் பெருமையை தன் திருப்புகழ் வாயிலாகப் பறைசாற்றுகின்றார்.
கொன்றைச்சடையார்க் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் பகர்வோனே (அம்பாத்த - திருச்செந்தூர்)
சிரவை ஆதீனம் இரண்டாம் குருமகாசன்னிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இயற்றிய குருந்தமலை முருகன் பிள்ளைத்தமிழில்,
ஆட்டில் களிப்போம்எம் மனை நீ
அழித்தற்கு இரங்கோம் ; உன் அருள் பொன்
அடியில் பொருந்தும் புழுதி, அதோடு
அமையாது, அறத்தோடூ அரி உரு ஆம்
மாட்டில் பொருந்தும் ; எம் பெருமான்
மார்பில் பொருந்தும் ; பிராட்டி திரு
மடியில் பொருந்தும் ; மலயமுனி
மனத்தீல் பொருந்தும் ; அருணகிரி
ஏட்டில் பொருந்தும்; ஏற்ற தலை -
யிடத்தில் பொருந்தும் ; பச்சை மயில்
எழிலில் பொருந்தும் ; தவத்தர் உளம்
எல்லாம் பொருந்தும் ; ஆதலினால்
தேட்டில் பொருந்தும் சிற்றடியால்
சிறியேம் சிற்றில் சிதையேலே!
சீலக் குருந்தாசலம் மருவும்
செல்வா! சிற்றில் சிதையேலே!
எனப் பாடி இருப்பார். இது மணலில் சிற்றில் அமைத்து விளையாடும் சிறுமியர்கள் பேசுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிறுமியர்கள் கட்டும் மணல் வீட்டை குழந்தை முருகன் தன் காலால் அழிக்கத் தொடங்குகின்றான். சிறுமியர்கள் முருகனிடம் கூறுகிறார்கள் முருகா நாங்கள் நீண்ட நேரமாகக் கட்டிய மணல் வீட்டை அழிக்கிறாய் அதனால் வீடூ அழிந்து விடுமோ என்று நாங்கள் வருந்தவில்லை. உன் திருவடியில் பொருந்தும் புழுதி உன் பாதத்தில் படிவதோடுூ மட்டும் நீன்றுவிடாது உன்னை எடுத்து அணைக்கும் சிவபெருமானது மார்பிலும், பராசக்தீயாகிய உனது தாயின் மடியிலும், அகத்திய முனிவரது மனதிலும், அருணகிரிநாதர் பாடல் எழுதீயுள்ள ஏட்டிலும் ஏற்படுமே என்று தான் எண்ணுகின்றோம். எனவே எங்கள் சிறு மணல் வீட்டை அழிக்க வேண்டாம். என்பது இப்பாடலின் கருத்தாகும்.
இப்பாடலின் மூலமாக அருணகிரிநாதர் பாடி எழுதிய எட்டில் முருகன் திருவடி பொருந்தியுள்ளது என்பதை அறியமுடிகிறது. இதன் மூலமாகவே அருணகிரிநாதரின் தனிப்பட்ட சிறப்பினை நாம் அறிய முடிகிறது.
அருணகிரியாரை தாயுமான சுவாமிகள்
ஐயா அருணகிரி அப்பா உன்னைப் போல
மெய்யாக ஓர்சொல் விளம்பினார் யார்-வையகத்தோர்
சாற்றரி தென் றேசற்றார் தன்மையாய் முக்கண் எந்தை
நாற்றிசைக்கும் கைகாட்டி னான் (உடல்பொய்-26)
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் தமது குறுங்கழில் நெடில் விருத்தத்தில்(3)
அருணையங்கிரி நாதன் தமிழ் மணமும்
அரிய கீரன் தமிழ் மணமும்
குரவினன் மணமும் கமழ்தரு போரூர்க்
குமரனே அமரர் நாயகனே.
எனப் போற்றியுள்ளார்.
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் விநாயகர் வணக்கத்தில் உலகிற் பேர் அருணகிரி திருப்புகழ் கண்டூ எனப் பாடியுள்ளார். இதே போன்று தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், காஞ்சிபுரம் சிதம்பர முனிவர், வரகவி மார்க்கசகாய தேவர், மேலகரம் பண்டாரக் கவிராயர், கந்தப்ப தேசிகர், தீருவருட்பிரகாச இராமலிங்க சுவாமிகள்,சென்னிக்குளம் அண்ணாமலை ைட்டியார், மதுரகவி க.கி.இராமசாமி ஐயர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எனப் பலர் அருணகிரிநாதரைப் புகழ்ந்து பாடி உள்ளார்கள்.
இவ்வாறாக சந்தத் தமிழில் கந்தப்பாக்களை நமக்கு ஈந்தளித்த அருணகிரிநாதருக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவரைக் கந்தன் ஆட்கொண்டத் திருத்தலமான தீருவண்ணாமலை கீரிவலப்பாதையில் மணிமண்டபம் அமைத்துத் திருக்குட நன்னீராட்டூச் செய்யவுள்ளது மிகச் சிறப்பான செயலாகும்.
யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்தனால்
எனப் பாடிய அருணகிரிநாதரின் புகழினைப் பறை சாற்ற அமையும் மணிமண்டபத்தின் திருக்குடமுழுக்கு விழாவில் வெளிவரும் இம்மலர் சிறக்க தமிழ்க்கடவுள் தண்டாயுதபாணிக் கடவுளின் திருவருளையும் ஆதிகுரு முதல்வர் தவப்பெருந்திரு இராமானந்த சுவாமிகளின் குருவருளையும் சிந்தித்து வாழ்த்துகீன்றோம்.
சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு தெளிவாகவும் இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக் கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்லுவார்கள். இந்த மஹானுடைய கவிதையோவென்றால், மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக் கொண்டு தெய்வீகக் கூத்தாடுகிறது.
— சுப்பிரமணிய பாரதியார்

